ADDED : டிச 11, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: மாலையகவுண்டன்பட்டி மேற்கு தெருவில் உள்ளவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பொது சாலையை பயன்படுத்தி வந்தனர்.
தனிநபர்கள் சிலர் மேற்கு தெரு பகுதி மக்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோட்டை ஆக்கிரமித்தனர். இப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுப்பதாக கூறகலைந்தனர்.

