/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மார்க்சிஸ்ட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

ADDED : ஜூன் 30, 2025 03:00 AM
வேடசந்தூர் : இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்களை இழிவாகப் பேசிய மார்க் லிஸ்ட் கட்சியினரை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.
வேடசந்தூரில் இந்து முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசியதாவது: 'முருக பக்தர்களை இழிவாக விமர்சித்த மார்க்சிஸ்ட் கட்சியினரை கண்டித்து, வருகிற ஞாயிறு (ஜூலை 5) அன்று, திண்டுக்கல் மணிக்கூண்டில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
வேடசந்தூர் மின் அலுவலக துவக்க விழாவில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., போட்டோவை குப்பைத் தொட்டியில் போட்டு அவமதித்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது' என்றார்.