ADDED : டிச 07, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் ஒரு சிலருக்கு மட்டும் நுாறு நாள் வேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அனைவருக்கும் நுாறுநாள் திட்ட வேலையை
முறையாக வழங்ககோரியும் நேற்று காலை அலங்காநல்லுார்- நத்தம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூற கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.