ADDED : அக் 29, 2025 09:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: - ராமநாயக்கன்பட்டியில் 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை.
இது தொடர்பாக மக்கள் பல முறை விராலிப்பட்டி ஊராட்சி நிர்வாகம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதை தொடர்ந்து குடிநீர் வழங்க கோரி அப்பகுதியினர் வத்தலக்குண்டு - ஆண்டிபட்டி ரோட்டில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு போலீசார் பேச்சுவார்த்தை பின் கலைந்தனர்.

