/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காலி பணியிடங்களை நிரப்பகோரி ஆர்ப்பாட்டம்
/
காலி பணியிடங்களை நிரப்பகோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2025 12:59 AM
நிலக்கோட்டை: விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்ப கோரியும், கலை பாடத் தொகுப்புகளையும் கொண்டுவர கோரி மா.கம்யூ., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
விளாம்பட்டி கிளைச் செயலாளர் போத்தி ராஜா தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பிரபாகரன், செயற்குழு அஜய் கோஸ், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சௌந்தர்ராஜன், காசிமாயன், ரவிச்சந்திரன், குருசாமி, கார்த்திகேயன், விளாம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோபனா அழகுமுருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.