தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குடிநீர் கேட்டு மறியல் முயற்சி

குடிநீர் கேட்டு மறியல் முயற்சி

குடிநீர் கேட்டு மறியல் முயற்சி


UPDATED : அக் 08, 2026 09:18 PM

ADDED : அக் 08, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:18 PM ADDED : அக் 08, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எரியோடு: எரியோடு அருகே சின்னழகுநாயக்கனுார் ஊராட்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியில் காவிரி திட்ட குடிநீர் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் நீர் விநியோகம் நடக்கிறது. மின் மோட்டார் பழுதான நிலையில் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் 4 கி.மீ., துாரம் சென்று நீர் பிடித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் முன்னாள் வார்டு உறுப்பினர் தர்மர் தலைமையில் காலி குடங்களுடன் கோவிலுாரில் திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

எரியோடு போலீசார், குஜிலியம்பாறை பி.டி.ஓ., வீரகடம்பகோபு உடனே கவனம் செலுத்தி, பழுது நீக்கிய மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் சப்ளையை சீரமைத்தனர். மறியல் கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us