ADDED : டிச 28, 2024 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம் : பழநி-கோயமுத்துார் சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் தாழையூத்து பகுதி அருகே தனியார் கலை அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
நேற்று இக்கல்லுாரி முன்னாள் பேராசிரியர்கள் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரணையில், கல்லுாரியில் பணிபுரிந்த பேராசிரியர்களுக்கு பணியில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆன நிலையிலும் பட்ட சான்றிதழ்கள் வழங்காததால் மறியலில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

