/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காந்திகிராம பல்கலை ரோட்டில் மறியல்
/
காந்திகிராம பல்கலை ரோட்டில் மறியல்
ADDED : ஜன 22, 2026 05:46 AM
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை வழியே கேந்திரிய வித்யாலயா பள்ளி வாகனங்களை அனுமதிக்க கோரி ரோடு மறியல் நடந்தது.
காந்திகிராமம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. மெயின் ரோட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழித்தடத்தில் ரோடு சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டு உள்ளது.
பள்ளி வாகனங்கள் செல்ல வழியின்றி காந்திகிராம பல்கலை வழியே மாற்று தடத்தில் பள்ளி வாகனங்களை இயக்க முயன்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கேந்திரிய பள்ளி வாகனங்களை அனுமதிக்க முடியாது என, ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பல்கலை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகே மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி, தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மறியல் நடந்தது. அம்பாத்துறை போலீசார், பல்கலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 40 நிமிடங்களுக்கு பின் பல்கலை வழியே வாகனங்களை அனுமதித்த சூழலில் மறியல் கைவிடப்பட்டது.

