/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆடு திருடும் கும்பலை பிடிக்க மறியல்
/
ஆடு திருடும் கும்பலை பிடிக்க மறியல்
ADDED : ஜூன் 01, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை, அய்யலுார் சுற்று பகுதி கிராமங்களில் சில மாதங்களாக 100க்கு மேற்பட்ட ஆடுகள் திருடு போயின.
சில தினங்கள் முன்பு முடக்குபட்டி, கருவார்பட்டி 5, நேற்றுமுன்தினம் இரவு வேங்கனுார் பகுதியில் 2 ஆடுகள் திருடு போயின. அதிருப்தியான மக்கள் நேற்று காலை அய்யலுார் எரியோடு ரோட்டில் வடுகப்பட்டி பிரிவு பகுதியில் ஆடுகளுடன் ரோடு மறியல் செய்தனர்.
வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார், ஆடு திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்க டி.எஸ்.பி., பவித்ரா உத்தரவிட்டுள்ள தகவலை கூற போராட்டத்தை கைவிட்டனர்.