/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தென்னையை அகற்ற எதிர்ப்பு; போலீசாருடன் தள்ளுமுள்ளு
/
தென்னையை அகற்ற எதிர்ப்பு; போலீசாருடன் தள்ளுமுள்ளு
UPDATED : செப் 20, 2024 09:45 AM
ADDED : செப் 20, 2024 02:05 AM

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம், மேட்டூர் - பலக்கனுாத்து பகுதியில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இங்குள்ள தருமத்துப்பட்டி கோம்பை அருகே கோட்டை முத்தாலம்மன் கோவிலுக்குச் சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இங்கு, பூசாரி நல்லான் தன் உறவினர்களுடன், ஆறு வீடுகள் கட்டி வசித்து வருகிறார். சாலைப் பணிக்காக அந்த நிலத்தில் உள்ள தென்னை மரங்களை அகற்ற சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் சென்றபோது எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடம், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது எனக்கூறி நெடுஞ்சாலை, வருவாய்த் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் தென்னை மரங்களை அகற்ற வந்தனர்.
அப்போது, விவசாயிகள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 25 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, 35 தென்னை மரங்களை அகற்றினர்.