/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்குக, பாதையை மீட்டுத்தாருங்க குறைதீர் கூட்டத்தில் 254 பேர் மனு வாயிலாக முறையீடு
/
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்குக, பாதையை மீட்டுத்தாருங்க குறைதீர் கூட்டத்தில் 254 பேர் மனு வாயிலாக முறையீடு
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்குக, பாதையை மீட்டுத்தாருங்க குறைதீர் கூட்டத்தில் 254 பேர் மனு வாயிலாக முறையீடு
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்குக, பாதையை மீட்டுத்தாருங்க குறைதீர் கூட்டத்தில் 254 பேர் மனு வாயிலாக முறையீடு
ADDED : பிப் 13, 2024 05:22 AM

திண்டுக்கல் : கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவும், பாதையை மீட்டுத்தாருங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 254 பேர் மனு வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இந்த பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.13,349 மதிப்பிலான திறன்பேசி, பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, தனித்துணை ஆட்சியர் கங்காகவுரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் கலந்துகொண்டனர்.
கோயில்களுக்கு இலவச மின்சாரம்
பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும் , குறைந்தது 20 ஆண்டுகள் பூஜை செய்து 60 வயது நிரம்பி ஓய்வு பெற்ற பூஜாரிகள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம், நலவாரிய அட்டை பெற ஆண்டு வருவாய் சான்று கோருவதில் விலக்களிக்க வேண்டும்.
அரசு கோயில்களுக்கு தீப எண்ணெய், பூஜைப்பொருட்கள் வழங்க வேண்டும், கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திபூஜாரிகள் பேரமைப்பின் சார்பில் முதல்வருக்கு கலெக்டரின் வாயிலாக மனு அளிக்கப்பட்டது.
குஜிலியம்பாறை, பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் ,காச்சக்காரன்பட்டி, திருவாத்தான் களம், கருங்கல் கிராமம், துா.செட்டியூர், சாலிக்கரை, சின்னாண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கருங்கல் முனியப்பன் கோயில், தேவர்மலை பெருமாள் கோயில், பாளையம் சந்தை சென்றுவர பொதுப்பாதை ஒன்று உள்ளது. பல தலைமுறைகளாக இதனை பயன்படுத்தி வருகிறோம்.
சமீபத்தில் தனிநபர் ஒருவர் அதனை வழி மறைத்து கரைபோட்டு நடக்க முடியாதவாறு செய்துள்ளார். போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. பாதையை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.