/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டுமனை பட்டா வழங்குங்க தேங்கும் கழிவுநீரால் பரிதவிப்பு மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

ADDED : நவ 25, 2025 04:06 AM
திண்டுக்கல்: மலைகிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை , தேங்கும் கழிவுநீரால் அவதி, சாதி சான்றிதழ் இல்லாமல் சிரமம் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 180 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீர்த்தனா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இதில் கொடைக்கானல் பன்றிமலையை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், 80 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்க வில்லை.
விரைவில் வீட்டுமனை பட்டா கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
திண்டுக்கல் ஏர்போர்ட்நகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில்,'' நடைபாதையில் சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் ரோடு பணி, சாக்கடை கால்வாய் பணி காரணமாக கால்வாயில் தேங்கும் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் வருவதாக தெரிவிக்கின்றனர். கழிவுநீர் தேங்காத வகையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப் பட்டுள்ளார்.
பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், குழந்தைகளுக்கு எங்கள் சமுதாயத்துக்கான சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்க முடியாமலும், அரசின் சலுகைகளை பெற முடியாமலும் தவிக்கிறோம்.
உடன் சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.