/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன்கார்டுதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பு வழங்குங்க
/
ரேஷன்கார்டுதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பு வழங்குங்க
ரேஷன்கார்டுதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பு வழங்குங்க
ரேஷன்கார்டுதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பு வழங்குங்க
ADDED : ஜன 22, 2024 05:34 AM

மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.ஆயிரம், ஒரு முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது.
அரசு பணியில் உள்ளோர் வருமான வரி செலுத்துவோர் போன்றோருக்கு ஜன.13,14ல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. பயோமெட்ரிக் இயந்திரம் வேலை செய்யவில்லை, மொபைல் நெட்வொர்க் கிடைக்கவில்லை உள்ளிட்ட காரணங்களை கூறினர். இதையடுத்து டோக்கன் பெற்ற சில கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அடுத்தடுத்த நாட்களில் அலைக்கழிப்பிற்கு உள்ளாகும் அவல நிலை தொடர்ந்தது. ஜன.14 வரை பொங்கல் தொகுப்பு முழுமையாக முடிக்கப்படாத சூழலில், இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் மீண்டும் கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்கப்பட்டது. காத்திருந்த 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள், அதிருப்தியில் உள்ளனர்.
தொகையை சம்பந்தப்பட்ட சங்கங்களில் செலுத்துமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவு ரேஷன் ஊழியர்களையும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. கரும்பு வழங்காத போதிலும் பரிசுத்தொகை, பச்சரிசி, சர்க்கரை தொகுப்பை இம்மாத இறுதிவரை நீட்டித்து, விடுபட்ட கார்டுகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.