/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயிகளுக்கு தேவையான விதை, இடுபொருட்கள் வழங்குங்க! துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

ADDED : ஜூலை 29, 2024 06:35 AM

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஜூன்,ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழையால் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதாலும் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்வதாலும் வைகை ஆறு, பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை ஆற்று பாசன விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி துவக்கி விட்டனர். வாழை, பூ சாகுபடிக்கு தயாராகுகின்றனர். மேலும் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மருதாநதி, மஞ்சள் ஆறு பாசன விவசாயிகளும் நிலங்களை சுத்தப்படுத்தி விவசாய பணிக்கு தயாராகின்றனர்.
இந்நிலையில் வேளாண், தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு தேவையான விதைகள்,இடுபொருட்களை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.