தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அறிவிப்பின்றி பி.டி.ஓ., அலுவலகம் மாற்றம்

அறிவிப்பின்றி பி.டி.ஓ., அலுவலகம் மாற்றம்

அறிவிப்பின்றி பி.டி.ஓ., அலுவலகம் மாற்றம்


UPDATED : ஜூன் 23, 2026 05:43 PM

ADDED : ஜூன் 23, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2026 05:43 PM ADDED : ஜூன் 23, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அறிவிப்பு எதுவும் இல்லாமல் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் பழைய கட்டடத்திற்கு பின்புறம் கட்டப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் திறக்கப்படுவதாக இருந்த கட்டடம் திறப்பு விழா காணவில்லை. கட்டடப் பணிகள் முடிவடைந்தும் திறக்காததால் த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும் புதிய கட்டடத்திற்கு அலுவலகம் மாற்றப்பட்டு உள்ளது.

இது தெரியாமல் கிராமத்தில் இருந்து வருபவர்கள் பழைய அலுவலக கதவுகள் மூடப்பட்டு இருப்பதை கண்டு திரும்பிச் செல்கின்றனர். சிலரே அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பின்புறம் உள்ள புதிய அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

புதிய கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றியது மக்களுக்கு தெரியும் வண்ணம் எந்த அறிவிப்பும் வைக்கவில்லை. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us