/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 18, 2025 04:28 AM
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் பேரூராட்சியில் கொண்டு வரப்பட உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அய்யம்பாளையம் பேரூராட்சியில் ரூ. 24 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் கொண்டு வருவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் விவசாயம் சார்ந்த பகுதி மற்றும் சாஸ்தா கோயில் இடம் என்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திட்ட ஆய்விற்கு அதிகாரிகள் வருகை தர இருப்பதாக தகவல் கிடைத்ததால், பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலகத்திற்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த பேரூராட்சி தலைவர் ரேகா ஐயப்பன், 'பேரூராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், செயல்படுத்த இயலாது என பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும்,அரசிற்கும் ஏற்கனவே அனுப்பி வைத்திருப்பதாக' கூறினார்.

