/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொதுஇடங்களில் குப்பை கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம்:மாநகராட்சி அறிவிப்பு
/
பொதுஇடங்களில் குப்பை கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம்:மாநகராட்சி அறிவிப்பு
பொதுஇடங்களில் குப்பை கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம்:மாநகராட்சி அறிவிப்பு
பொதுஇடங்களில் குப்பை கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம்:மாநகராட்சி அறிவிப்பு
ADDED : நவ 22, 2024 04:17 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து தினமும் 100 டன்னிற்கு மேல் குப்பை சேகரிக்கப்படுகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க அனைத்து வார்டுகளிலும் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது.
பொதுமக்களிடம் தங்கள் வீட்டிலிருந்து வழங்கும் குப்பையை மக்கும்,மக்காத என 2 வகையாக தரம்பிரித்து வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தினமும் துாய்மை பணியாளர்கள் காலை,மாலை நேரங்களில் வீடு,வீடாக சென்று மக்கும்,மக்காத குப்பையை தரம்பிரித்து சேகரிக்கின்றனர்.
மக்கும் குப்பையை நுண் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு போய் உரம் தயாரிக்கின்றனர். மக்காத குப்பையை அதற்கென உள்ள தனி இடத்தில் சேகரிக்கின்றனர். இருந்தபோதிலும் பொது மக்கள் ரோட்டோரங்களில் குப்பையை வீசி செல்வது, துாய்மை பணியாளர்களிடம் வழங்காமல் ரோட்டோரங்களில் குவித்து வைக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
அவர்களை தடுத்து குப்பை கொட்டும் இடங்களை சுத்தம் செய்து அந்த இடங்களில் கோலம் வரைந்து துாய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்னும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டும் கலாச்சாரம் குறைந்தபாடில்லை. இதை முற்றிலும் தடுத்து அவரவர் வீடுகளின் குப்பையை முறையாக துாய்மை பணியாளர்களிடம் தான் வழங்கவேண்டும். மீறி ரோட்டில் கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அதோடு மட்டுமில்லாமல் பொது இடங்களில் யாராவது குப்பையை கொட்டுகிறார்களா என கண்காணித்து அவர்களை கையும், களவுமாக பிடிக்க 48 வார்டுகளிலும் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.