/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி மாசடைந்து வரும் 'கொடை' கூக்கால் ஏரி கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
/
பராமரிப்பின்றி மாசடைந்து வரும் 'கொடை' கூக்கால் ஏரி கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
பராமரிப்பின்றி மாசடைந்து வரும் 'கொடை' கூக்கால் ஏரி கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
பராமரிப்பின்றி மாசடைந்து வரும் 'கொடை' கூக்கால் ஏரி கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
ADDED : ஆக 29, 2025 03:32 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் கூக்கால் ஏரியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து ஏரி மாசடைந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. கொடைக்கானலில் இருந்து 35. கி.மீ., தொலைவில் உள்ளது கூக்கால். இப்பகுதியில் 10 ஏக்கரில் கூக்கால் ஏரி உள்ளது.கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசிக்க தவறுவதில்லை.தமிழகத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் ஒன்றான கூக்கால் ஏரி அ.தி.மு.க., ஆட்சியின் போது துார்வாரப்பட்டது. இருந்த போதும் இந்த ஏரி முறையாக பராமரிப்பணி மேற்கொள்ளாத நிலையில் சில ஆண்டுகளாக ஆகாயத்தாமரை ,அல்லிச்செடிகள் ஏரி முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏரி மாசடைந்து வருகிறது. கூக்கால் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்குகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இருந்த போதும் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமப்பால் ஏரி பொலிவிழந்து வருவது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீர் தாவரங்களை அகற்ற கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. நன்னீர் ஏரிகளில் ஒன்றாக திகழும் கூக்கால் ஏரியின் அழகை பராமரிக்க இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை ஆர்வலர் கற்பகமணி கூறியதாவது: கூக்கால் ஏரியை சுற்றி ஏராளமான வனவிலங்குகள் வாசிக்கின்றன. நீர்வாழ் உயிரினங்களும் அதிகளவில் உள்ளன. ரூ. 50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகள் முறையாக கையாளாத நிலையில் ஏரி மாசடைய காரணமாக இருந்தது. மேலும் பொதுப்பணிதுறையும் ஏரியின் பராமரிப்பில் சிறிதும் அக்கறை காட்டாத நிலையே ஆகாயத்தாமரை அபரிவிதமாக வளர்ந்ததற்கு காரணமாக உள்ளது. ஏரியை சுற்றிய நிலப்பரப்புகளும் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.