/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி கண் திறத்தல்
/
நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி கண் திறத்தல்
ADDED : பிப் 24, 2024 05:45 AM

நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் நடந்த பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சியில் கருடன் வானத்தில் வட்டமிட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி பெருந்திருவிழா பிப்.12 கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் தீர்த்தம் எடுத்தல், காப்பு கட்டுதல், மாவிளக்கு , கரும்புத் தொட்டில் என பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி கண் திறத்தல் நேற்று நடந்தது. இதில் பூஜைகள் செய்யப்பட்டு கண் திறக்கப்பட்டது.
அப்போது கருடன் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர்.
இதை தொடர்ந்து மாலை மாரியம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வருதல் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி , பூக்குழி இறங்குதல் பிப்.27ல் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,கோயில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.