/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு
/
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED : செப் 29, 2024 05:29 AM
திண்டுக்கல் : புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
நேற்று புரட்டாசி 2ம் சனிக்கிழமை என்பதால் திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம், புஷ்பாஞ்லி செய்ய விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது.
ஆண்டாள் சன்னதி முன்பு உள்ள உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப் பெருமாள், கோபிநாத சுவாமி, கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள், குஜிலியம்பாறை அடுத்த ஸ்ரீரமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் என மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளல் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஒட்டன்சத்திரம் : பருமருத்துப்பட்டி ஸ்ரீ வெங்கடேஷ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. காளாஞ்சிபட்டி ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பாக அலங்காரம் செய்ய பூஜைகள் நடந்தது.
பெரியகோட்டை கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி : சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் முத்தங்கி ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
மகாதீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது.
--பழநி :பழநி மேற்கு ரதவீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், ராமநாத நகர் காரிய சித்தி லட்சுமி நரசிம்மர் கோயில், கண்ணடி பெருமாள் கோயில், ரங்கநாதர் பாதம், பாலாறு அணை ஆஞ்சநேயர் கோயில், பாலசமுத்திரம் வீர ஆஞ்சநேயர் கோயில் கரடிகூட்டம் சாந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.