பழநியில் விடுதிகளுக்கு செல்ல கியூ.ஆர்., கோடு வழிகாட்டி
பழநியில் விடுதிகளுக்கு செல்ல கியூ.ஆர்., கோடு வழிகாட்டி
ADDED : ஜூலை 10, 2026 04:14 AM
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி நிலைய அலுவலகத்தில் இருந்து பிற விடுதிகளுக்கு செல்ல கியூ.ஆர்., கோடு வழிகாட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி வசதி உள்ளது. அதன்படி தண்டபாணி நிலையத்தில் 78 அறைகள், வேலவன் விடுதியில் 43 அறைகள், குறிஞ்சி விடுதியில் 10 அறைகள், சின்னகுமாரர் விடுதியில் 7 அறைகள் உள்ளன.
தற்போது தண்டபாணி நிலைய வளாகம், சின்னகுமாரர் விடுதி வளாகத்தில் புதிய அறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் தண்டபாணி நிலைய அலுவலகத்தில் அறைகள் ஒதுக்கக் கோரி வருகின்றனர். அதன் பிறகு அங்கிருந்து பிற விடுதிகளுக்கு செல்ல வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
எனவே விடுதிகளின் வழியை கண்டறிய தண்டபாணி நிலைய அலுவலகம் முன் கியூ.ஆர்., கோடு முறையிலான வழிகாட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
