/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கேள்விக்குறியாகும் சுகாதாரம்: பெருகும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள்
/
கேள்விக்குறியாகும் சுகாதாரம்: பெருகும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள்
கேள்விக்குறியாகும் சுகாதாரம்: பெருகும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள்
கேள்விக்குறியாகும் சுகாதாரம்: பெருகும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள்
ADDED : ஜன 20, 2024 05:20 AM

மாவட்டத்தின் பல இடங்களில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் போக்கு மக்களிடம் அதிகரித்து
வருகிறது. இவ்வாறு சிறுநீர் கழிப்பவர்கள் பொதுமக்கள் நடமாட்டம் பற்றிய கூச்சம் அறவே இல்லாமல் இருப்பதால் ரோட்டில் நடமாடும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
முட்டுச்சந்து, வாகனங்கள் பார்க்கிங், தலைவர்கள் சிலை அருகில் வெகுநாட்களாக பூட்டியிருக்கும் வணிக நிறுவனங்கள், மேல் தளமற்ற சாக்கடைகள், பிளக்ஸ் பேனர் மறைவிடங்கள், கோயில் சுவர்கள் உட்பட திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை பலர் அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் பகுதிகளில் மதுபிரியர்களின் லொல்லு' வேதனை அளிக்கிறது.
குற்ற உணர்வு சிறிதுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிக சாதாரணமாக அரங்கேறும் பலரின் இந்த நான்சென்ஸ்'செயல்களை போலீசாரும் கண்டு கொள்ளாமல் விடுவதால் நகரின் துாய்மை கெடுவதோடு சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், புகை பிடித்தல், திறந்த வெளி மலம்கழித்தல், தனிமனித சச்சரவில் ஆபாச வார்த்தைகளை சத்தமாக அரங்கேற்றல் போன்ற தனிமனித அநாகரீக போக்கை தடுக்க போதிய நடவடிக்கை செயல்பாடுகளில் இல்லாமல் உள்ளது. இதையே சாதகமாக்கி இத்தகைய செயல்கள் குற்ற உணர்வின்றி தொடர்கிறது. பொதுவிடங்களில் அசுத்தம் செய்யும் சிலரின் போக்கை கட்டுப்படுத்த வாகன ஒழுங்குமுறை சட்டம் போல் நடவடிக்கை பாய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.