ADDED : பிப் 05, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் தேவிநாயக்கன்பட்டி மலையடிவாரப் பகுதியில் வனப்பாதுகாப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மலைப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் 24, கருப்பையா 27, ஆகிய இருவரும் முயல் வேட்டையாட முயற்சித்தனர். இருவரையும் மடக்கிப்பிடித்த வனத்துறையினர் அய்யலுார் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்பு கொண்டதன் அடிப்படையில் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

