/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 'ராபிட் போர்ஸ்'
/
திண்டுக்கல்லில் 'ராபிட் போர்ஸ்'
ADDED : பிப் 14, 2024 04:37 AM
திண்டுக்கல், : லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதையொட்டி திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளை ஆய்வு செய்ய கோவை ராபிட் ஆக் ஷன் போர்ஸ் பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
லோக்சபாதேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள்,தேர்தல் நடக்கும் இடங்கள்,ஏற்கனவே தேர்தலின் போது பிரச்னை ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய கோவையிலிருந்து ராபிட் ஆக் ஷன் போர்ஸ் பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். இவர்கள் நேற்று திண்டுக்கல் நகரில் உள்ள வடக்கு,தெற்கு, மேற்கு,தாலுகா உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களை ஆய்வு செய்தனர். அதன்பின் இன்ஸ்பெக்டர்கள், உயர் அதிகாரிகளிடம் பிரச்னைகள் ஏற்பட்டால் வேகமாக எப்படி வருவது உள்ளிட்ட சந்தேகங்களை கேட்டறிந்தனர். தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் தேர்தல்போது பிரச்னைகள் ஏற்பட்ட பகுதிகள்,காட்டுப்பகுதிகள்,போலீஸ் ஸ்டேஷன்கள்,மலைக்கிராமங்கள் உள்ளிட்ட எல்லா பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். ஒரு வாரம் இவர்கள் மாவட்டத்தில் முகாமிட்டு இப்பணிகளில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி.,பிரதீப் தெரிவித்தார்.

