/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுார் சந்தையில் விற்பனைக்கு குவிந்த பந்தய சேவல்கள்
/
அய்யலுார் சந்தையில் விற்பனைக்கு குவிந்த பந்தய சேவல்கள்
அய்யலுார் சந்தையில் விற்பனைக்கு குவிந்த பந்தய சேவல்கள்
அய்யலுார் சந்தையில் விற்பனைக்கு குவிந்த பந்தய சேவல்கள்
ADDED : ஜன 14, 2025 05:35 AM

வடமதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் சந்தையில் நேற்று ஏராளமான பந்தய சேவல்கள் விற்பனைக்கு வந்தன. இதை சேவல் ஆர்வலர்கள் ரூ.30 ஆயிரம் வரை விலை பேசி வாங்கி சென்றனர்.
வடமதுரை அய்யலுார் வாரச்சந்தையில் காலை நேரத்தில் ஆடு, கோழி விற்பனை அதிகம் நடக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக நேற்று சிறப்பு சந்தை கூடியது.
பண்டிகை நேரத்தில் சேவல் சண்டை பந்தயம் அதிகம் நடத்தப்படுவதால் ஏராளமான பந்தய சேவல்கள் விற்பனைக்கு வந்தன. ரூ.30 ஆயிரம் வரை விலை போனது.
இதை வாங்கிய சேவல் ஆர்வலர்கள் சேவல்களை சண்டையிட செய்து திறனை சோதித்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'பந்தய சேவல் மீது ஆர்வம் கொண்டோர் அதிகம் உள்ளனர். சேவல் சண்டை பந்தயங்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பரவலாக நடப்பதால் சேவல்கள் வாங்க அதிகளவில் வெளிமாநில வியாபாரிகளும் இங்கு வருகின்றனர்.
இதனால் வடமதுரை சுற்றுப்பகுதியில் பந்தய சண்டை சேவல் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. ஒரு வீட்டில் 10 சேவல்களை வளர்த்து பயிற்சி தந்தால் ஆறே மாதங்களில் ரூ.1.50 லட்சம் வரை எளிதாக லாபம் பார்க்க முடியும்' என்றனர்.