UPDATED : அக் 11, 2026 08:21 PM
ADDED : அக் 11, 2026 08:18 PM
அ நிறம் | அளவு
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பொருந்தல், பாலாறு அணைப் பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடந்தது.
பழநி பாலசமுத்திரம் அருகே புளியம்பட்டி கருட பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பொருந்தல், பாலாறு, பொருந்தலாறு அணைப் பகுதியில் ரேக்ளா ரேஸ் பந்தயம் நடந்தது. பொள்ளாச்சி, காங்கேயம், தாராபுரம், புளியம்பட்டி, பழநி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 150 வண்டிகள் பங்கேற்றன. 200 மீட்டர் நடந்த போட்டியில் வென்ற ரேக்ளா வீரர்களுக்கு பரிசு தொகை, மெடல், சீல்டு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
