UPDATED : செப் 01, 2026 08:54 PM
ADDED : செப் 01, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அக்ரஹாரம் ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆராதனை விழா நடந்தது.
மூன்று நாட்களாக பூர்வ ஆராதனை, மத்திய ஆராதனை, உத்திர ஆராதனையில் பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பஜனை, ராம நாம பாமாலைகள் பாடப்பட்டன. அலங்கார பந்தி பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. க்ஷ ஏற்பாடுகளை பிருந்தாவன நிறுவனர் கோபிநாதன், சுதர்சன் செய்திருந்தனர்.
