/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார் ராகுல்
/
பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார் ராகுல்
ADDED : மார் 11, 2026 06:32 AM

திண்டுக்கல்: தேர்தல் பிரசாரத்திற்காக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் விரைவில் தமிழகம் வருவார் என காங்., தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று அமைதி, மதசார்பற்ற நிலையை தமிழகத்தில் தொடர தி.மு.க., உடன் இணைந்து காங்., பாடுபடும்.
பா.ஜ., அரசின் தவறான கொள்கையால் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஓட்டல்கள் மூடப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும் என தெரியவில்லை. நாடு முழுவதும் சிறு, குறு வணிக நிறுவனங்கள், ஓட்டல் தொழிலை நம்பி உள்ள தினசரி கூலித் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர்.
இந்தநிலையை சரிசெய்யமத்திய அரசு என்ன திட்டம் வகுத்துள்ளது என தெரியவில்லை. கடந்த வாரம் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு கூறியது. இந்தவாரம் நிலைமைதலைகீழாக மாறி உள்ளது.
தற்போதைய சூழலில் அப்பார்ட்மென்ட், தங்கும் விடுதிகளில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் தமிழகம், அசாம், புதுச்சேரியில் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. சுமூகமாக உறவு தொடர்கிறது.
எங்கள் கூட்டணி புதிய கூட்டணி அல்ல. பலமுறை ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்துள்ளோம்.
தி.மு.க., அறிக்கையில் எங்களின் கருத்துகள், ஆலோசனைகளும் பிரதிபலிக்கும் என்றார் .

