/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி; 6 எக்ஸ்பிரஸ்கள் தாமதம்
/
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி; 6 எக்ஸ்பிரஸ்கள் தாமதம்
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி; 6 எக்ஸ்பிரஸ்கள் தாமதம்
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி; 6 எக்ஸ்பிரஸ்கள் தாமதம்
ADDED : பிப் 12, 2024 11:32 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே அம்பாத்துரை கொடைக்கானல்ரோடு இடையில் நடக்கும் தண்டவாள சீரமைப்பு பணிகளால் நேற்று கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உட்பட 6 ரயில்கள் திண்டுக்கல்லிலிருந்து தாமதமாக புறப்பட்டன.
அம்பாத்துரை-கொடைரோடு இடையில் சில நாட்களாக தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இவ்வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்படுகிறது.
நேற்று கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மதியம் 1:12 மணிக்கு திண்டுக்கல் வந்து 2:42 மணி நேரம் தாமதமாக மதியம் 3:54 மணிக்கு புறப்பட்டது. கட்சேகுடா-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மதியம் 2:36 மணிக்கு வந்து 2:00 மணி நேரம் தாமதமாக மாலை 4:36 மணிக்கு புறப்பட்டது. தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மதியம் 2:50 மணிக்கு வந்து 2:00 மணி நேரம் தாமதமாக மாலை 4:50 மணிக்கு புறப்பட்டது.
மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மாலை 4:09 மணிக்கு வந்து 1:00 மணி நேரம் தாமதமாக மாலை 5:09 மணிக்கு புறப்பட்டது. சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாலை 4:45 மணிக்கு வந்து 34 நிமிடம் தாமதமாக மாலை 5:19 மணிக்கு புறப்பட்டது. ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மாலை 4:22 மணிக்கு வந்து 1:12 மணி நேரம் தாமதமாக மாலை 5:34 மணிக்கு புறப்பட்டது. பயணிகள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.