/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலடி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்
/
ரயிலடி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : மார் 18, 2025 05:34 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் கும்பாபிேஷகம் விழா மார்ச் 14 ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் தொடங்கின. 15ம் தேதி காலை கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு முதல்கால, 2 ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜையில் வேதபாராயணம், பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சித்தி விநாயகர், கைலாசநாதர், ஆனந்த வல்லி தாயார், ஆஞ்சநேயர், தாண்டாயுதபாணி, வள்ளி ,தெய்வானை,ஸ்ரீசுப்பிரமணியர், நவகிரகங்கள், பைரவர் சன்னதி கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய அனைத்து மூலஸ்தானத்திலும் அபிஷேகம் நடைபெற்றது. திண்டுக்கல் சிவபுரம் ஆதினம் 57 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ,சுபம் பேப்ரிக்ஸ் சிவராம்,பாலாஜி ,பி.என்.சி .தர்ம சாஸ்தா டிரஸ்ட் தலைவர் லோகநாதன் ,செயலர் அழகர்சாமி , பொருளாளர் பாலமுருகன், ஆடிட்டர் அழகர்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் , சிவாச்சாரியார் கைலாசம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.