தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு


UPDATED : அக் 08, 2026 09:45 PM

ADDED : அக் 08, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:45 PM ADDED : அக் 08, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொண்ட விரிவாக்க பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பழநி ரயில்வே ஸ்டேஷனில் ரூ.13.80 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகளை 2024ல் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் முகப்பு, மக்கள் நடைபாதை, ரோடு, ரயில்வே ஸ்டேஷன் விஸ்தரிப்பு, பயணிகள் காத்திருப்பு கூடம், கழிப்பறை வசதி, புதிய பிளாட்பார்ம், சறுக்குப்பாதை, வாகன பாதுகாப்பு வளாகம், பிளாட்பார்ம் பகுதியில் குடிநீர் வசதி, டிக்கெட் வழங்கும் இடம் உட்பட பல்வேறு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்.,11ல் பிரதமர் மோடி நவீனமயமாக்கப்பட்ட பழநி ரயில்வே ஸ்டேஷனை திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.

முதுநிலை கோட்ட மேலாளர்கள் சிவா, கணேஷ், துணை தலைமை பொறியாளர் கதிசக்தி உட்பட ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us