/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அயோத்தி ரயில் பாதுகாப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள்
/
அயோத்தி ரயில் பாதுகாப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள்
அயோத்தி ரயில் பாதுகாப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள்
அயோத்தி ரயில் பாதுகாப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள்
ADDED : ஜன 19, 2024 05:34 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் வழியாக அயோத்தி செல்லும் சிறப்பு ரயில்கள் வரும் நேரங்களில் ரயில்வே ஊழியர்களை பாதுகாப்பு படையுடன் இணைந்து பணியாற்ற ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் ஜன.22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் வழியாக ஏராளமான ரயில்கள் செல்கின்றன.
இந்த ரயில்கள் வரும் நேரங்களில் எந்தவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ஒரு மாதம் முன்பே உத்தரவிட்டனர்.
அதன்படி இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்கள் நெருங்கி வருவதால் ரயில்வேயில் பணியாற்றும் பார்சல் பிரிவினர், டிக்கெட் வழங்கும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பணியாளர்களையும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் இணைத்து அயோத்தி செல்லும் சிறப்பு ரயில்கள் வரும் போது பயணிகள் முறையாக தங்களது இருக்கைகள் அமைந்த பெட்டிகளுக்கு செல்கிறார்களா, ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுகிறதா என பாதுகாப்பு பணியில் ஈடுபட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இதற்கான பணிகளை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.

