/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட்; வாகன ஓட்டிகள் 8 மணி நேரம் தவிப்பு

ADDED : நவ 12, 2024 11:59 PM
திண்டுக்கல்; திண்டுக்கல் - திருச்சி ரோட்டிலிருந்து ரவுண்ட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், சிலுவத்துார், நத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏராளமான வாகன ஓட்டிகள் ஜி.டி.என்., ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
அங்கிருந்து திருச்சி ரோட்டிற்கு வருவோரும், இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். ஜி.டி.என்., ரோட்டில் பழனி மார்க்கமாக செல்லும் ரயில்கள் செல்வதால், ரோட்டின் குறுக்கே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரோட்டில், இரண்டு பள்ளிகள் செயல்படுகின்றன.
நேற்று காலை, 9:30 மணி முதல் ரயில்வே நிர்வாகம் சார்பில், ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் முன்னறிவிப்பில்லாமல், பராமரிப்பு பணியை துவங்கினர்.
இந்த பணி மாலை 5:00 மணி வரை, 8 மணி நேரம் தொடர்ந்தது. இதனால், ஜி.டி.என்.,ரோட்டை பயன்படுத்தும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
ரயில்வே நிர்வாகம் முன்னறிவிப்பின்றி, ரயில்வே கேட்டை மூடி பணிகள் செய்வதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ரயில்வே பொறியாளர் ரகுமான் கூறியதாவது:
ரயில்வே கேட்டில் பணி செய்ய போகிறோம் என, நேற்று முன்தினமே, திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன், ஜி.டி.என்., ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடிதம் கொடுத்து, தகவல் தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.