/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே பயணிகள் நலக்குழு கூட்டம்
/
ரயில்வே பயணிகள் நலக்குழு கூட்டம்
ADDED : அக் 20, 2024 05:06 AM
சின்னாளபட்டி : அம்பாத்துறை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பயணிகள் நலக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஸ்டேஷன் மேலாளர் ரகுராம் மீனா தலைமை வகித்தார்.
ரயில்வே கோட்ட பொறுப்பாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். பா.ஜ., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் புதுமைராஜா, சின்னாளபட்டி மண்டல் தலைவர் விக்னேஷ், மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் பூங்காவனம், பட்டியல் அணி பொறுப்பாளர் குருசாமி பங்கேற்றனர்.
வைகை எக்ஸ்பிரஸ், துாத்துக்குடி, மைசூர், மும்பை செல்லும் ரயில்கள் அம்பாத்துறை ஸ்டேஷனில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வது, ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறை, கூரை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.