ADDED : ஆக 14, 2026 10:51 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.15
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சந்தேகத்திற்கிடமான நபர்கள், பொருட்கள் குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்புப் படையினர், உள்ளூர் போலீசார் இணைந்து நவீன கருவிகள் உதவியுடன் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தினர். திண்டுக்கல் வழியாகச் செல்லும், வரும் அனைத்து ரயில்கள், பயணிகள் கொண்டு வந்த லக்கேஜ்கள், பார்சல்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
