/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இருளில் ரயில்வே ஸ்டேஷன்;அவதியில் பயணிகள்
/
இருளில் ரயில்வே ஸ்டேஷன்;அவதியில் பயணிகள்
ADDED : நவ 07, 2024 02:00 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளில் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளதால் இரவு நேரத்தில் பயணிகள் ரயில் ஏற சிரமப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இரவு நேரத்தில் பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ,வாராந்திர ரயில்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் பகுதி பயணிகள் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த ஸ்டேஷனில் மூன்று நடை மேடைகள் உள்ளன. ஸ்டேஷன் அருகில் உள்ள நடைமேடை பகுதிகளில் மட்டுமே இரவு நேரத்தில் விளக்குகள் எரிகின்றன. நடைமேடையின் பிறபகுதிகளில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் ரயில் வரும் வரை பயணிகள் இருளில் காத்திருக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் ,பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ரயில் வரும் வரை அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை கருதி நடைமேடையின் அனைத்து பகுதிகளிலும் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.