/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தொடரும் மழை; நிரம்பி வழியும் பழநி வரதமா நதி; அணை வீட்டின் சுவர் இடிந்ததில் தப்பிய குடும்பம்; திராட்சையில் வெடிப்பால் பெரும் இழப்பு
/
திண்டுக்கல்லில் தொடரும் மழை; நிரம்பி வழியும் பழநி வரதமா நதி; அணை வீட்டின் சுவர் இடிந்ததில் தப்பிய குடும்பம்; திராட்சையில் வெடிப்பால் பெரும் இழப்பு
திண்டுக்கல்லில் தொடரும் மழை; நிரம்பி வழியும் பழநி வரதமா நதி; அணை வீட்டின் சுவர் இடிந்ததில் தப்பிய குடும்பம்; திராட்சையில் வெடிப்பால் பெரும் இழப்பு
திண்டுக்கல்லில் தொடரும் மழை; நிரம்பி வழியும் பழநி வரதமா நதி; அணை வீட்டின் சுவர் இடிந்ததில் தப்பிய குடும்பம்; திராட்சையில் வெடிப்பால் பெரும் இழப்பு
ADDED : அக் 23, 2025 03:40 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக பழநி வரதமா நதி அணை நிரம்பி வழிகிறது.வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரு குடும்பத்தார் உயிர் தப்பினர். இதோடு திராட்சை பழத்தில் வெடிப்பு ஏற்பட இதன் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வாரமாக விட்டு, விட்டு கனமழை பெய்தது. தீபாவளியன்றும், அதற்கு மறுநாளும் பெய்த தொடர் மழையால் பண்டிகை உற்சாகம் களை இழந்தது. தொடர் மழையால் வீட்டுக்குள் முடங்கிய மக்களுக்கு சற்று ஆறுதலாக நேற்று பகலில் வெயில் தலைகாட்டியது.
வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்தநிலை நேற்று மாலையே தலைகீழாய் மாறியது. 3:00 மணி முதலே வெயில் குறைந்து மழைக்கு அச்சாரமிட்டபடி வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. 6:00 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை 30 நிமிடம் வெளுத்து வாங்கியது. இதனால் திண்டுக்கல் நகரின் ஜி.டி.என்., சாலை, ஏ.எம்.சி. சாலை, பழநி சாலை, சாலை ரோடு, பஸ்நிலையம், ரவுண்ட்ரோடு பகுதி, பாண்டியன் நகர், நேருஜி நகர், ரயில்நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. மழையால் பொதுமக்கள், வேலைக்கு சென்றவர்கள் அவசர அவசரமாக பணி முடித்து வீடு திரும்பினர். மழை இரவு வரை சாரலாக தொடர்ந்து பெய்தது.
பழநி: பழநி அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று மதியம் 12:00 மணிக்கு பாலாறு பொருந்தலாறு அணையில் (65 அடி) 36.68 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து வினாடிக்கு 512 கன அடி, வெளியேற்றம் 10 கன அடியாக இருந்தது. வரதமாநதி அணை (66.47) நிரம்பி வழிகிறது. இங்கு நீர் வரத்து வினாடிக்கு 110 கன அடி, வெளியேற்றம் 110 கன அடியாக உள்ளது. குதிரையாறு அணையில் நீர் (80) 52.12 அடி உயர்ந்து, வரத்து 103 கன அடியும், வெளியேற்றம் 8 கன அடியாக உள்ளது.
வரமாநதி அணை நிறைந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதைதொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரமாநதி உபரி நீர் பெரிய வாய்க்கால் மூலம் ஆயக்குடி குளங்களுக்கும் வரதமா நதி ஆற்றிலும் செல்கிறது.
குஜிலியம்பாறை: பாளையம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி வெங்கடேசன் 45. மனைவி தனலட்சுமி , இரு, குழந்தைகள், தம்பி சரவணன் 40, இவரது மனைவி சகுந்தலா. இரு குழந்தைகள், தாயார் நல்லம்மாள் உள்ளார்.
அடுத்தடுத்து இருவீடுகளில் இரு குடும்பத்தாரும் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் இரு வீடுகளின் பின் சுவர் பின்பக்கமாக இடிந்து விழுந்தது. வீட்டில் துாங்கியவர்கள் எழுந்தனர். சுவர் வீட்டின் உள்பக்கமாக சாய்ந்திருந்தால் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். குஜிலியம்பாறை தாசில்தார் ரவிக்குமார் விசாரிக்கிறார்.
நேற்று காலை நிலவரப்படி
மழையளவு (மி.மீ.,ல்)
கொடைக்கானல் -22.5 போட் கிளப் -28 திண்டுக்கல் - 5.6 புகையிலை ஸ்டேஷன் -- - 5.2 வேடசந்துார் - 5.2 காமாட்சிபுரம் - 3.5 நிலக்கோட்டை - 2