ADDED : ஆக 09, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று காலையில் வெயில் வெளுத்து வாங்கியது. மாலை 4:00 மணி அளவில் திடீரென இருண்ட வானம் மழைக்கு அச்சாரமிட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே கனமழை பெய்ய துவங்கியது.
சுமார் 40 நிமிடம் பெய்த மழையால் திண்டுக்கல்லில் காலையில் உண்டான வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
கனமழையினால் நகரின் ஜி.டி.என்., சாலை, ஏ.எம்.சி., கார்ப்பரேஷன் சாலை, பழநி சாலை, ரதவீதிகள், சாலை ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரவுண்ட்ரோடு பகுதி, பாண்டியன் நகர், நேருஜி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல்லில் மாலைக்கு பின் குளிர்ந்த சீதோஷ்ணநிலை ஏற்பட்டதில் மக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

