
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:- கொடைக்கானலில் ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வறண்ட வானிலை நீடித்தது.
அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் பெய்தது. குளுகுளு நகரான கொடைக்கானல் சுட்டெரிக்கும் வெயிலால் புழுக்கமடைந்தது.
நேற்று மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்து நகர் சில்லிட்டது. அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டம், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியதை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்தனர்.