ADDED : அக் 25, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று இரவு 7:30 மணி முதல் பலத்த மழை பெய்தது.
இம்மழை அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, சாலைப்புதுார் சுற்றிய பகுதிகளில் பெய்தது.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வடிகால் வசதி இருந்தும் மழை நீர் வெளியேற வழியின்றி ரோட்டிலே தேங்கியது.
இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். மேலும் இப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்க சென்ற மக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.