ADDED : அக் 25, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து மழை மற்றும் மழை நீரால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்ளனர்.
அதன்படி வேடசந்துார் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மண் மூடைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர், மண்வெட்டி, கோடாரி, கயிறு உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
இப் பொருட்களை உதவி கோட்ட பொறியாளர் ராஜன் ஆய்வு செய்தார். உதவி பொறியாளர் தினேஷ் பாபு, சாலை ஆய்வாளர்கள் இன்பராஜ், அரியநாயகி உடன் இருந்தனர்.

