/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விளைநிலத்தில் தேங்கிய மழை நீர்; நெல் சாகுபடி பாதிப்பு
/
விளைநிலத்தில் தேங்கிய மழை நீர்; நெல் சாகுபடி பாதிப்பு
விளைநிலத்தில் தேங்கிய மழை நீர்; நெல் சாகுபடி பாதிப்பு
விளைநிலத்தில் தேங்கிய மழை நீர்; நெல் சாகுபடி பாதிப்பு
ADDED : ஆக 21, 2024 05:50 AM

செம்பட்டி செம்பட்டி பகுதி விளைநிலங்களில் தேங்கிய மழைநீரால் நெற்பயிர் சேதமடைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையால் ஆத்துார் நீர்த்தேக்க வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வரத்து நீர் பாசன குளங்களுக்கு செல்லும் நிலையில் ஒரு பகுதி கருங்குளம், நடுக்குளம் வழியே செம்பட்டி புல்வெட்டி கண்மாயை வந்தடைகிறது.
இதனை ஆதாரமாக கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடப்பது வழக்கம். தற்போது செம்பட்டி, புதுக்காமன்பட்டி, பாளையங்கோட்டை, போடிக்காமன்வாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
இச்சூழலில் சமீபத்திய மழையால் , விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பாளையங்கோட்டை, போடிக்காமன்வாடி, நரசிங்கபுரம் பகுதியில், 40 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது. வேளாண்மை, வருவாய் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தி விபர சேகரிப்பில் ஈடுபட்டனர்.

