ADDED : ஆக 20, 2026 12:09 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: சுற்றுலா தலமான கொடைக்கானலில் சில மாதமாக வறண்ட வானிலை நீடித்தது. ஒரு வாரமாக மிதமான மழை, பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் செண்பகனுார், பிரகாசபுரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. நகர் பகுதியில் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.
