ADDED : ஆக 20, 2026 12:08 AM

அ நிறம் | அளவு
பண்ணைக்காடு: பண்ணைக்காட்டில் சேதமடைந்துள்ள நுாலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பண்ணைக்காடு பேரூராட்சியில் கொடைக்கானல் மெயின் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் நுாலக கட்டடம் கட்டப்பட்டது. இந்த நுாலக கட்டடத்தின் கூரை சேதமடைந்தும், வளாகச்சுவர் இடிந்து விரிசல் ஏற்பட்டு விபத்து அபாயத்தில் உள்ளது. கனமழையின் போது மழைநீர் உள்ளே பகுந்து ஆவணங்கள், புத்தகங்கள் நனைகின்றன.
நாள்தோறும் ஏராளமான வாசகர்கள் வந்து செல்லும் நிலையில் நுாலக கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
