sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாய்க்கால்கள் சேதத்தால் திசைமாறி செல்லும் மழை நீர்

/

வாய்க்கால்கள் சேதத்தால் திசைமாறி செல்லும் மழை நீர்

வாய்க்கால்கள் சேதத்தால் திசைமாறி செல்லும் மழை நீர்

வாய்க்கால்கள் சேதத்தால் திசைமாறி செல்லும் மழை நீர்


ADDED : அக் 04, 2024 06:52 AM

Google News

ADDED : அக் 04, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி வளாகத்தில் விஷ பூச்சிகள் : அய்யலுார் குளத்துப்பட்டியில் துவக்கப் பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து விறகுகளை அடுக்கி வைத்துள்ளதால் விஷ பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். --

--தன்ராஜ், அய்யலுார்.

டிராக்டரில் பயணிக்கும் ஆட்கள் : திண்டுக்கல்லில் டிராக்டரில் ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகனங்களும் அதிக வேகமாக செல்கிறது. இது போன்ற வாகனங்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவக்குமார், திண்டுக்கல்.

சேதமான மின்கம்பம் : திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி ரோடு ரயில்வே கேட் அருகே மின்கம்பம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலம் என்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .காற்று அடிக்கும் போது முறிந்து விழும் நிலை உள்ளது.

-பாஸ்கரன், திண்டுக்கல்.குப்பையால் தொற்று : திண்டுக்கல்- திருச்சி ரோடு ஏழு மாடி கட்டடம் அருகே குப்பை குவித்து அகற்றப்படாமல் உள்ளதால் பொதுமக்கள்,மாணவர்கள் கடந்து செல்லும்போது தொற்றுநோய் அபாயம் உள்ளது. குப்பை உடனுக்குடன் அகற்ற வேண்டும். -நல்லதம்பி, திண்டுக்கல்.

ரோட்டில் சாக்கடை கழிவுநீர் : திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி ரோட்டில் சாக்கடை கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது .கழிவுநீர் ரோட்டில் வராமல் தடுக்க வேண்டும்.

-கிருஷ்ணசாமி, திண்டுக்கல்.வீணாகும் குப்பை வண்டி : திண்டுக்கல் காந்திஜி நகரில் சீலப்பாடி ஊராட்சி குப்பை வண்டி சேதமடைந்து துருப்பிடித்து வீணாகிறது. யாரும் கண்டு கொள்ளாமல் அப்படியே கிடக்கிறது .வண்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், திண்டுக்கல்.வாய்க்கால் சேதம் : குஜிலியம்பாறை ஒன்றியம் திருக்கூர்ணம் ஊராட்சி குடகனாறு பாசனத்திற்கான கிளை வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக வரத்து நீர் முறையாக செல்லாமல் --திசை மாறி செல்கிறது.இதனை சீரமைக்க வேண்டும். -ஜி.ஆர்.ராஜகோபால், திருக்கூர்ணம்.






      Dinamalar
      Follow us