UPDATED : நவ 12, 2026 07:22 PM
ADDED : நவ 12, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு முன்னெடுத்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாக அமைத்து, பராமரிக்க வேண்டும் என கமிஷனர் பிரேம்ஆனந்த் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டன.
