/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரங்களை வெட்டியதால் தவிப்பு... பாதாள சாக்கடையால் பாதிப்பு... பிரச்னையின் பிடியில் ராம்நகர் குடியிருப்போர்
/
மரங்களை வெட்டியதால் தவிப்பு... பாதாள சாக்கடையால் பாதிப்பு... பிரச்னையின் பிடியில் ராம்நகர் குடியிருப்போர்
மரங்களை வெட்டியதால் தவிப்பு... பாதாள சாக்கடையால் பாதிப்பு... பிரச்னையின் பிடியில் ராம்நகர் குடியிருப்போர்
மரங்களை வெட்டியதால் தவிப்பு... பாதாள சாக்கடையால் பாதிப்பு... பிரச்னையின் பிடியில் ராம்நகர் குடியிருப்போர்
ADDED : பிப் 13, 2025 05:57 AM

திண்டுக்கல்: பல மாதங்களாக சீரமைக்கப்படாத சாக்கடைகள், சேதமான வடிகால்களால் ரோட்டில் ஓடும் கழிவுநீர், மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள், கடித்து குதறும் கொசுக்கள், மரங்களை வெட்டும் அதிகாரிகள் என ஏராளமான பிரச்னைகளில் ராம்நகர் பகுதி மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.
ராம்நகர் குடியிருப்போர் சங்க கவுரவ தலைவர் ராஜசேகரன், செயலாளர் சேக்முஜிபுர் ரகுமான், இணை செயலாளர்கள் கோவிந்தராஜ், பசுபதி, நிலைக்குழு தலைவர் தேவ பிரகாசம் கூறியதாவது:
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு முல்லைதெரு, மல்லிகை தெரு, தாமரை தெரு, ரோஜாதெரு உள்ளிட்ட தெருக்களை உள்ளடக்கிய இப்பகுதிகளில் ரோட்டோரங்களில் அதிகாலையில் முதியவர்கள்,சிறுவர்கள்,பெண்கள் நடை பயணம் மேற்கொள்ள முடியாத அளவிற்கு தெரு நாய்கள் அச்சுறுத்துகின்றன. டூவீலர், கார்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துகின்றன. சில நேரங்களில் வெறி பிடித்து மக்களையும் கடிக்க பாய்கின்றன.
மாநகராட்சியில் புகார் கொடுத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ரோடுகள் நடக்க முடியாத அளவிற்கு சேதமாகி கிடப்பதால் பெண்கள், வயதானவர்கள் திணறுகின்றனர். டூவீலர்களில் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். மழை நேரங்களில் சொல்ல முடியாத அளவிற்கு பாதாள சாக்கடை கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை பாடாய் படுத்துகிறது. இரவு முழுவதும் துாங்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சாக்கடை முறையாக பராமரிக்கப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் ஓடும் நிலை உள்ளது.
மாநகராட்சி குடிநீர்வாரத்திற்கு இரு முறை வழங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரோடெங்கும் குப்பை சிதறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. கொசுத்தொல்லை அதிகம் உள்ளது.
எங்கள் பகுதியில் குடியிருப்பு மக்களுக்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிறைவேற்றித்தரவேண்டும்.
கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் கழிவு நீர் தேங்குவதை தடுக்கவேண்டும். ரவுண்ட்ரோடு பகுதியில் சாயும் நிலையிலான மரங்களை வெட்டினால் பரவாயில்லை. புதிய மரக்கன்றுகளையும் வெட்டி உள்ளனர்.
இதனால் சுற்றுச்சூழல் தான் பாதிக்கப்படுகிறது. ஜி.டி.என்.ரோட்டில் பாதாள சாக்கடையை முறையாக அமைக்காமல் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இங்கு நடக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

