/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல் ஒரே வாரத்தில் 12 பேருக்கு பாதிப்பு
/
வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல் ஒரே வாரத்தில் 12 பேருக்கு பாதிப்பு
வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல் ஒரே வாரத்தில் 12 பேருக்கு பாதிப்பு
வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல் ஒரே வாரத்தில் 12 பேருக்கு பாதிப்பு
ADDED : டிச 22, 2024 02:31 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னிக்காய்ச்சல் பரவல் வேகமடைந்து ஒரே வாரத்தில் 12 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் மண்ணுக்கு அடியில் வாழும் 'ஸ்கரப்டைபஸ்' எனும் பூச்சி பல இடங்களில் பரவ தொடங்கியது. இந்த பூச்சிகள் ஒட்டுண்ணிகள் போல் மனிதர்கள் உடலில் தொற்றிக்கொண்டு கடிக்கிறது. இவை கடித்ததும் உன்னிக்காய்ச்சல் எனும் தொற்று பரவ ஆரம்பிக்கிறது.
இந்த தொற்றில் பாதிக்கப்பட்டு இம்மாத துவக்கத்தில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த இருவர் இறந்தனர்.
இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் உன்னிக்காய்ச்சல் குறித்த அச்சம் எழுந்தது. பாதிப்புகளை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காததால் இக்காய்ச்சலின் வேகம் அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 12 பேருக்கு உன்னிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கிராம பகுதிகளில் பரவிய இக்காய்ச்சல் நேற்று திண்டுக்கல் நகர் பகுதியான நாயக்க புதுத்தெருவில் உள்ள 45 வயது ஆண் ஒருவருக்கு வந்துள்ளது. தற்போது உன்னிக்காய்ச்சலால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.