/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருமண தடை நீங்க ரதி, மன்மத பூஜை
/
திருமண தடை நீங்க ரதி, மன்மத பூஜை
ADDED : ஏப் 25, 2025 06:50 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருமண தடை நீங்க , குழந்தை வரம் கிடைக்க ரதி மன்மத பூஜை நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சன்னதி மண்டபத்தில் ரதி ,மன்மதன் சிலைகள் உள்ளது. இங்கு திருமண தடை நீங்கவும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்க ரதி மன்மத சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆண்கள் திருமண தடை நீங்க ரதி தேவிக்கும், பெண்கள் மன்மதனுக்கும் பூஜை செய்தார்கள். தம்பதிகள் பெருமாளை வணங்கினால் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம். இதையொட்டி நேற்று காலையில் இருந்து ஐந்து முறை பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு பூஜையிலும் நுாற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.