ADDED : பிப் 13, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் குரும்பபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணக்குமார்41. குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வெளி மாவட்ட ஓட்டல்கள், பண்ணைகளுக்கு சப்ளை செய்தார். நேற்று முன்தினம் வத்தலக்குண்டு வழியாக 1500 கிலோ ரேஷன் அரிசியை மினிலாரியில் கடத்தி சென்றார்.
இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ.,ராதா தலைமையிலான திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் வத்தலக்குண்டு சர்வீஸ் ரோட்டில் மடக்கி அவரை கைது செய்தனர். அரிசியையும் பறிமுதல் செய்தனர்.